திருவாரூர் மாவட்டம்.
செய்தியாளர் வேலா செந்தில்,
ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி…
திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்து செல்லப்பட்ட அப்பகுதியை சேர்ந்த சிறார்களை துணிச்சலுடன் போராடி 2 உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருநாட்டியதாங்குடி கிராமத்தின் வழியாக பாயும் வெள்ளையாற்றில் கடந்த இருதினங்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது.
இவ்வாற்றின் படித்துறையில் அப்பகுதியை சேர்ந்த மாங்கனி என்ற பெண் குளித்து கொண்டிருந்தார். அப்போது திருநாட்டியத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவன் கேம்ஸ்சரண் மற்றும் காட்டூர் பகுதியை சேர்ந்த மாமன் மகன் 11ம் வகுப்பு படிக்கும் கவியரசன் ஆகிய இருவரும் தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக ஆற்றில் குளிக்க வந்துள்ளனர்.
இதில் கேம்ஸ்சரணுக்கு நீச்சல் தெரிந்தநிலையில் ஆற்றில் வேகமாக இறங்கிட, அவனது மாமன் மகன் கவியரசன் நீச்சல் தெரியாதநிலையில் அவனும் ஆற்றில் இறங்கியுள்ளான். நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்றில் வேகமாக சென்ற நீரின் சூழலில் மாட்டிக்கொண்டனர். அப்போது கேம்ஸ்சரண் மாமன் மகனை பிடித்து இழுத்து கூச்சலிட்டபோது படித்துறையில் குளித்துகொண்டிருந்த மாங்கனி என்ற பெண் தனக்கு நீச்சல் தெரிந்ததால் இரண்டு சீறார்களையும் ஆற்றில் கொஞ்ச தூரம் இழுத்துசென்று ஆற்றின் கரையோரம் நாணல்புல் மண்டிருந்த மேட்டு பகுதியில் இரண்டு சீறார்களையும் காலால் தள்ளி உயிரைகாப்பாற்றியுள்ளார். அப்போது இரண்டு சீறார்களும் மயங்கிகிடந்ததைகண்டு மாங்கனி ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தவர்களை அழைக்க ரோகித் என்ற இளைஞர் இரண்டு சீறார்களையும் ஆற்றின் கரைக்கு கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.
ஆற்று நீரில் முழ்கிய இரு சீறார்களில் கேம்ஸ்சரன் நீச்சல் தெரிந்தநிலையில் வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்று நீரிரை அளவுக்கு அதிகமாக குடித்ததால் நுரையிரல் தொற்று ஏற்பட்ட நிலையில் குழந்தை வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சீறார்களையும் மாங்கனி என்ற பெண் நொடிபொழுதில் துணிச்சலாக செயல்பட்டு தனது திறமையால் ஆற்றின் தண்ணீர் வேகமாக செல்லும் திசையில் அவர்களை தள்ளிசென்று ஆற்றின் பக்கவாட்டில் உள்ள நாணல்புல் பகுதிக்கு கொண்டுசென்று சீறார்களின் உயிரை மீட்டுகொடுத்த அவரை வீரமங்கையாக அப்பகுதிமக்கள் கொண்டாடி பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
மேலும் திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் தண்ணீரை முறைப்படுத்தும் சட்ரஸ் பகுதி அருகே உள்ள ஆற்றின் படித்துறையில் குளிக்கும் பொதுமக்களது உயிரைகாப்பாற்றிட பெட்டேம் கட்டிதரவேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிரழப்பு சம்பவம் ஏற்பட்டுவதற்கு முன்பாக பெட்டேம் கட்டுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்சம்பவத்தை மேற்கோள்காட்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்