மதுரையில் புதிய தேசிய கட்சி உதயம் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா அறிவிப்பு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் புதிய அரசியல் கட்சிக்கான பெயர் மற்றும் கொள்கைகள் குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அறிவித்துள்ளார்

இந்த நிகழ்ச்சிக்கு பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார் ஒருங்கிணைப்பாளர் பர்மா கணேசன் துணை ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார் கட்சி பெயரை அறிமுகம் செய்த வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா தனது கட்சியின் கொள்கை கட்சியின் வியூகம் கட்சியின் நோக்கம் குறித்து விரிவாக செய்தி யாளர்களிடம் பேசினார்

அவர் கூறும்போது தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவராக கடந்த 16 ஆண்டு காலம் இந்த அமைப்பை தமிழகம் முழுவதும் அனைத்து கூக் கிராமங்களிலும் சேவைகளை தொடங்கி இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்தி வந்தோம் இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பட்டிகள் வைத்து தமிழகவ முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடம் அரசியல் கட்சி தொடங்கலாமா வேண்டாமா என்ற கருத்து வாக்கெடுப்பு 5 லட்சம் மக்களிடையே நடத்தினோம் இந்த வாக்கெடுப்பின் படி 90 சதவீதம் சதவீதம் மக்கள் அரசியல் கட்சி தொடங்க ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்

இதன்படி எனது தலைமையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளோம் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல் அதிகாரம் பெறும் வகையில் இந்த கட்சியை தொடங்கி உள்ளோம் இவ்வாறு கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா கூறினார் இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு காரணம் என்ன அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியலில் அதிகாரம் பெற வேண்டும் ஊரக உள்ளாட்சி அமைப்பு முதல் சட்டமன்றம் பாராளுமன்றம் வரை பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பது எங்களின் நோக்கம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் 2026 எந்த அரசியல் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்கள்.

எங்களின் கொள்கை கோட்பாடுக்கு ஏற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமைப்பது கட்சியின் பொதுக்குழு செயற்குழு முடிவெடுத்து நல்ல அறிவிப்பை வெளியிடுவோம் மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றியை நிர்ணயம் செய்கின்ற வாக்கு சதவீதங்களை பெற்றுள்ளோம் இவ்வாறு அவர் கூறினார் இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஆர் எஸ் தமிழன் சாஸ்தா பாண்டியன் தேனி பன்னீர்செல்வம் மாநில இளைஞரணி தலைவர் மணி செயலாளர் சுறா தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்தா மணி ரகுபதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *