நேஷனல் யோகா அஸோஸியேஷன் ஆப் இந்தியா மற்றும் யோகா பெடரேஷன் ஆப் ஆசியா அவர்கள் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி,பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 56 பதக்கங்களுடன் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்..
மாநில அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி ,பள்ளியில் பயிலும்,மூன்று வயது முதலான குழந்தைகள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இதில், ஆர்ட்டிஸ்டிக்,ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன..
இதில்,கலந்து கொண்ட கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி,குழந்தைகள் உட்பட மாணவ,மாணவிகள் தங்கம், வெள்ளி,என 56 பதக்கங்கள் பெற்று,அதிக புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்..
இந்நிலையில் மாணவ,மாணவிகளுக்கு,கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி
பள்ளியின் தாளாளர் திருமதி மாலதி முரளிகிருஷ்ணன், பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் பெற்றோர்கள் ,உறவினர்கள்,பள்ளி ஆசிரியர்கள் , பொது மக்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ,மாணவிகள் விரைவில் துபாய், அந்தமான், ஸ்ரீலங்கா,தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள உள்ளனர்..