காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் – நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது….

கடந்த இரு தினம் முன்பு திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டிணம் வழியாக தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காயல் பட்டிணம் செல்வதற்காக் ஏறும் இஸ்லாமிய பெண்னை ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நடத்துனரின் இத்தகை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.

அனைத்து சமூக மக்களும் ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணம் செல்வதற்காக தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்கின்றன.அப்படி இருக்கும் போது காயல் பட்டிணத்திற்கு செல்வற்க்காக வேண்டி பேரூந்தில் எறும் முயற்சித்த போது காயல் பட்டிணம் பயணிகளை ஒனர் ஏற்ற வேண்டாம் என சொன்னதாக நடத்துனர் இஸ்லாமிய பெண்ணிடம் வாக்கு வாதம் செய்வதை பார்த்தால் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை காட்டுகிறது.மேலும்

காயல் பட்டிணம் வழியாக செல்ல தனியார் பேருந்துகளின் ஒனர்கள் அரசு இடம் அனுமதி பெற்று கொண்டு காயல் ட்டிணம் பயணிகளை பேருந்தில் ஏற கூடாது என சொல்வதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது.மேலும் காயல் பட்டிடிணம் பயணிகளை புறக்கனிக்கும் தனியார் பேருந்து நிர்வாகமே ஒள்றை தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் புறக்கனித்தது போல் காயல் பட்டிணம் மக்கள் தனியார் பேருந்துகளை புறகனித்தால் உங்களின் பேருந்து நிர்வாகத்தையே இழுத்து மூட வேண்டியது வரும்.என்பதை உணர வேண்டும்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கூடி இருக்கும் இடத்தில் வைத்து இஸ்லாமிய பெண்ணின் சுய மரியாதையை கெடுக்கும் வகையில் வாக்கு வாதத்தில் ஈடு பட்ட. நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் காயல் பட்டிணம் மக்களை தனியார் பேருந்து நிர்வாகத்தினர் புறகனித்தால் காயல் பட்டிணம் ஊர் குள் தனியார் பேருந்துக்கள் நுழைய முடியாத சூழல் உருவாகும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *