தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், செப்- 15.
தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம், தஞ்சாவூர் சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம் மற்றும் ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நேற்று தஞ்சை மாதாக்கோட்டை பைபாஸ் ரேடியண்ட் சி.பி.எஸ்.இ பன்னாட்டு பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான 7-வது சிலம்பம் போட்டியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் சபினாமேரி வரவேற்றார் . ரேடியண்ட் பன்னாட்டு பள்ளி தாளாளர் ஆல்பர்ட் குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 5 வயது முதல் 30 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனி தனியாக போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியானது வயதின் அடிப்படையில் நடத்தப்பட்டது. நெடுங்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு, தொடு முறை, வேல்கம்பு ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
தொடர்ந்து மாலை வரை போட்டி நடைபெற்றது இதையடுத்து சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன . பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .
இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் இந்த சிலம்பம் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம் மாநில செயலாளரும் ரிதன் பிரின்ஸி விக்டரி அகாடமி நிறுவனருமான ஆசான் அர்ஜுன் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு வெற்றி சங்கம் மாநில தலைவர் ரஜினி, மாநிலத் துணைச் செயலாளர் கார்த்திக், மாநில பொருளாளர் வெற்றிவேல், தொழில்நுட்ப இயக்குனர் பாஸ்கர் மற்றும் மூத்த ஆசான்கள் , பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .