திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாற்று திறனாளிகளுக்காக மத்திய அரசு வெறும் உத்தரவை மட்டும் மாநில அரசுக்கு வழங்கிவிட்டு நிதி வழங்காமல் இருப்பதை கண்டித்தும், தமிழகத்தில் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டையை ஏஏஒய் கார்டுகளாக மாற்றி தர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் உதவி ஆணையாளரிடம் மாற்று திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டையை ஏஏஒய் கார்டுகளாக மாற்ற வேண்டும் என மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட செயலாளரான ராணி கூறியதாவது,
மாற்று திறனாளிகள் விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வெறும் உத்தரவுகளை மட்டும் வழங்கிவிட்டு நிதி வழங்காமல் இருப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம்.

இதேபோல் தமிழக அரசும் மாற்று திறனாளிகள் குடும்ப அட்டையை ஏஏஒய் கார்டுகளாக மாற்றி தர மனு அளித்து போராத்தில் ஈடுபட்டுள்ளோம். ஏஏஒய் கார்டுகளாக மாற்றுவதன் மாற்று திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் அளிக்கப்படும் திட்டங்களை எளிதில் பெறுவதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசின் மாற்று திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று உணவு பொருள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *