மாவட்ட செய்தியாளர்
முகம்மது இப்ராகிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் பண்பொழி அடுத்துள்ள மணலூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பூத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தமிழரின் அடையாளமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தந்த மாமேதை அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி உறுதிமொழி ஏற்கப்பட்டது தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் என்ற முழக்கத்தோடு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாக்குகளை சரிபார்த்த பி எல் 2 பாக முகவர்களின் செயல்பாடு இருக்கு சிறப்பான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்தென்காசி ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் பண்பொழி முகமது கபீர் திருமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் எம்.எஸ் இசக்கி ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் அபூபக்கர் சித்திக் பேரூர் வர்த்தக அணி அமைப்பாளர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான உல்லாசம் என்ற முகமது இஸ்மாயில் கிளைச் செயலாளர் திவான் ஒலி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.