முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன ப.சிதம்பரம் பிறந்த நாள் விழா அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹர சுதன் தலைமையில் நடைபெற்றது..
முன்னதாக கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சாரதாம்பாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் நீண்ட ஆயுள் ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..
இதனை தொடர்ந்து,மாற்றுத்திளனாளி பெண் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது..இதே போல , கோவை புது சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..தர்காவில் சிறப்பு பிரார்த்தனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது..இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என். கந்தசாமி, ஐ.என்.டி.யூ.சி. கோவை செல்வன், பச்சை முத்து, சவுந்தரகுமார்,உட்பட பலர் கலந்து கொண்டனர்…