ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்-செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு
ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக,இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ என்ற மாரத்தான் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது..
பொதுமக்கள் அனைவரும் குழந்தைகள் புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக,தொடர்ந்து மூன்றாவது பதிப்பாக நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டீ சர்ட் வெளியீட்டு விழா மருத்துவமனை வளாக அரங்கில் நடைபெற்றது..
இதில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’மாரத்தான் பதக்கம் மற்றும் டீ சர்ட் ஆகியவற்றை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி வெளியிட்டார்..
தொடர்ந்து மாரத்தான் நிகழ்வு குறித்து பேசிய அவர்,மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ள இந்த மாரத்தான் நிகழ்வில், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்-எல்.எம்.டபிள்யூ,லஷ்மி மில்ஸ் நிறுவனம்,லஷ்மி கார்டு குளோத்திங் ஆகிய நிறுவனங்களும் இணைத்து நடத்த உள்ள இதில்,புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்..
இந்த சந்திப்பின் போது, குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார், குழந்தைகள் இருதய மருத்துவர் கல்யாண சுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மருத்துவர் அஜீதா, குழந்தைகள் இருதய மருத்துவர் சன்ச்சிதா ஹரிணி ஆகியோர் உடனிருந்தனர்…