எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம் இந்து அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இங்கு மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமையப் பெற்றதும், தேவாரப் பாடல் பெற்றதுமான இது நவகிரகங்களில் புதன் பகவானுக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது.
காசிக்கு இணையான சிவ தலங்களுல் முதன்மையாக விளங்குகிறது. ஆதி சிதம்பரம் என போற்றப்படும் இங்கு சிவபெருமானின் அம்சமான அகோர மூர்த்தி, நடராஜ பெருமான் தனி தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததுமான இத்தளத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் சிறந்த ஞானமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் புதன் பகவான் அருட்பிரசாதம் வெண்பொங்கல் அன்னதானத் திட்டத்தை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு புதன்கிழமை முன்னிட்டு புதன் பகவான் சன்னதியில் அன்னதானத்தை வழங்கினர். திரளான பக்தர்கள் புதன் பகவானை தரிசனம் செய்து நான் செய்து அன்னதான பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் முருகன், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தாண்டவமூர்த்தி, நாகராஜன் ,நாகபிரகாஷ், சுந்தரி ரத்தினவேல், மற்றும் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.