கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் முப்பெரும் விழா துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு..
கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு தமிழக துணை முதல்வரும், இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் திருமாநிலையூரில் அமைந்துள்ள பெரியாரின் திருஉருவசிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் “சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை” என்ற இலக்குகளை முன்னெடுத்து செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.