மதுரையில் குற்ற வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட் களை விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
வழக்கு விசாரணை முடிந்தவு டன், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை நீதிமன்றம் உத்தரவின் பேரில் போலீசார் முற்றிலும் அழித்து விடுவார்கள்.
அவ்வாறு தமிழகத்தின் தென்மண்டல பகுதியில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கு கொண்டு வந்து அழித்து விடுவது வழக்கம்.
மதுரை மாநகரில் 158 வழக்குகளில் இருந்து கைப்பற்றப்பட்ட 975 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் நாங்குநேரிக்கு பாதுகாப்பாக கொண் டு வரப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
அவையனைத்தும் இங்குள்ள பொத்தையடி அசெப்ட்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வைத்து தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகர வடக்கு காவல் துணை ஆணையர். அனிதா, மதுவி லக்கு கூடுதல் சூப்பிரண்டு சக்திவேல், நாங்குநேரி துணை சூப்பிரண்டு தர்ஷிகா நடரா ஜன், தடய அறிவியல் துறை வித்தியா தரணி மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்