துறையூர் திராவிட கழகம் சார்பில் தந்தை பெரியாரின்147 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

துறையூர் செப் -17
திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் (17-09-2025) கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்புறம், விநாயகர் தெரு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சமூக நீதி நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ஜெ. தினேஷ் பாபு, மாவட்ட மாணவரணி தலைவர் ரெ. தன்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சே. விஷ்ணு வர்தன்,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் த.ரஞ்சித் குமார்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ்,உப்பிலியபுரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாராடி எம் ஏ. ரமேஷ், மாவட்ட ப. க. துணை செயலாளர் எஸ். என். புதூர். கருணாகரன், மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு,மாவட்ட ப. க. துணை தலைவர் த. கலைப் பிரியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காவியா, துறையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இர. வரதராஜன்,துறையூர் நகர திராவிடர் கழக தலைவர் க. இராஜா,துறையூர் நகர மாணவரணி தலைவர் ச. சர்ஜுன், துறையூர் நகர இளைஞரணி தலைவர் சிக்கத்தம்பூர் பொ.முரளி,பொதுக்குழு உறுப்பினர் கோர்ட் பெ. பாலகிருஷ்ணன், கோர்ட் எம். ஆர். சந்திரபோஸ், சிங்களாந்தபுரம் கிளைக் கழக தலைவர் ஞான சேகரன், மாவட்ட மகளிரணி மாலினி சண்முகம், ஆட்டோ அழகு மலை, பெரியார் பிஞ்சுகள் கா. செ. இனியன் செல்வா, கா. செ. மலரிதழ்,மா.ச.டார்வின் பெரியார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் தந்தை பெரியாரின் தொண்டு, கொள்கை பற்றி மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் எடுத்துரைத்தார்.அப்போது தந்தை பெரியார் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *