கரூர் செய்தியாளர் மரியான்பாபு
கரூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு பாஜகவினர் கொண்டாட்டம்..
கரூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின்75 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான உமாதேவி ரவி தலைமையில் கரூர் மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள், காவல் துறையினர்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் தங்கவேல்,வழக்கறிஞர் சௌமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் வழிகாட்டல் படி சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம் இராசப்பகவுண்டர் மற்றும் மாவட்ட செயலாளர் காவேரி A.மோகன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்,
இதில் வழக்கறிஞர்கள் துரைஅரசன்,கிருஷ்ணமூர்த்தி,பிரபு,மாவட்ட பொதுச்செயலாளர் சாமித்துரை,மாவட்ட செயலாளர் மாணிக்கம்மாள்,கரூர் தெற்கு மாநகர தலைவர் தமிழ்செல்வன்,கடவூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீவிகான் ரமேஷ் நிர்வாகிகள் சாரங்கபாணி,குப்புராவ் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.