எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் ஒரே இடத்தில் புது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் இதய மருத்துவம் எலும்பு நரம்பியல் காது மூக்கு தொண்டை என 17 பிரிவுகள் சிறப்பு மருத்துவர்கள் முகாமில் மருத்துவ சேவைகள் ஆலோசனைகள் வழங்கினர் சுற்றுவட்டார முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் நகர செயலாளர் சுப்பராயன் மண்டல இணை இயக்குனர் டாக்டர் பத்மாவதி ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார் பிரபாகரன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த அதிகாரிகள் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் டோக்கன் பெற்று கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது