உத்தமபாளையம் அருகே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சித்தா பெட்டகம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த முகாமில் இணை இயக்குனர்கள் மரு கலைச்செல்வி மரு அன்புச்செழியன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு ஜவஹர்லால் உதவி ஆணையர் தொழிலாளர் நலன் ராமராஜ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி பேரூராட்சி மன்றத் தலைவர்கள் கோம்பை மோகன்ராஜ் உத்தமபாளையம் அப்துல் காஷிம் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் அனுமந்தன்பட்டி ராஜேந்திரன் தாசில்தார் கண்ணன் பேரூராட்சி செயல் அலுவலர்கள் கோம்பை சுருளி வேல் உத்தமபாளையம் சின்னச்சாமி பாண்டியன் அனுமந்தன்பட்டி சீனிவாசன் கம்பம் புதுப்பட்டி சா. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்