திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்
திருவாரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் குடும்ப உறவுகள் சந்திப்பு மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அஸ்வினி பூபதிபாலன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த.. மாநில வழக்கறிஞர் மணிசெந்தில் தெரிவித்ததாவது..
விஜய்க்கு கூடும் கூட்டம் அவரது முகத்தை பார்க்க கூடும் கூட்டம். விஜயின் முகத்தை பார்த்துவிட்டு அவரது பேச்சைக் கேட்காமல் கூட்டம் கலைந்து விடும் ஆனால் நாம் தமிழர் கட்சி 15 ஆண்டுகளாக மாற்று அரசியல் புரட்சி என்பதை உருவாக்கி மகத்தான அரசியல் பணியை செய்து கொண்டிருக்கிறது. மாற்று அரசியல் என்ன என்பதை தமிழக கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில் பொது தொகுதிகளில் ஆதி தமிழருக்கு இடம் பாலின சமத்துவம் பல்வேறு விதமான புதிய திட்டங்களை ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி மற்ற கட்சிகளுக்கு உணர்த்தி வருகிறது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தத்துவ எதிரியாக உள்ள திராவிட கட்சிகளும் தேசிய கட்சிகளும் தான் எங்களுக்கு எதிரிகள் இவர்களை நாங்கள் எதிரிகளாக கூட நினைக்கவில்லை என்றார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அஸ்வினி பூபதிபாலன் கூறும்போது..
திருவாரூர் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருந்த நிலையில் இன்றும் ஓஎன்ஜிசி செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. முதல் கட்டமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை சொல்லில் மட்டுமில்லாமல் செயலால் நிரூபித்து காட்டுவோம் என்று உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராசு, மாநில வழக்கறிஞர் மணிசெந்தில், மாநில பொருளாளர் மருத்துவர் பாரதிசெல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.