பிரத்யேகமாக அமைக்கப்பட்ட செம்மண் பாதையில் சீறிப்பாய்ந்த கார்கள்
மதுரையில் நடைபெற உள்ள அடுத்த சுற்று போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி கோவையில் விஷன் 4 மோட்டார் ஸ்போர்ட்ஸ் சொல்யூஷன் வழங்கும் சியால் எனும் தென்னிந்தியன் ஆட்டோக்ராஸ் லீக்கின் மூன்றாவது தகுதி சுற்று , மலுமிச்சம்பட்டி பகுதியில் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட பிரத்யேக டிராக்கில் நடைபெற்றது… ,
சர்வதேச டிராக் அமைப்பில் செம்மண் பாதையில் அமைக்கப்பட்ட இதில்,
ஓபன் ,அமெச்சூர் மற்றும் லேடீஸ் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
போட்டிகளில், நாடு முழுவதும் இருந்து பெண் ஓட்டுனர்கள் உட்பட 20 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர் இதில் ஓபன் பிரிவில் டினூப் ,அமெச்சூர் பிரிவில் விஹான்,
மற்றும் பெண்கள் பிரிவில் சோனாக்ஷி,ஆகியோர் முதலிடம் பிடித்தனர்…
இந்நிலையில் நான்காவது சுற்று போட்டிகள் மதுரை அருகே உள்ள கலாசலிங்கம் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற உள்ள நிலையில்,பந்தயத்தை நேரில் கண்டு ரசிக்க பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
பந்தயத்தில் கலந்து கொண்ட ஓட்டுநர்கள் தங்களது தைரியம், திறமை, மற்றும் சாய்ந்த நிலத்தில் வாகனத்தை கட்டுப்பாடாக அதே சமயத்தில் வேகமாக இயக்கியதை ,பார்வையாளர்கள் புதிய அனுபவத்துடன் கண்டு ரசித்தனர்..