கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி துவக்கி வைத்தார்..
கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கரும்புக்கடை சாரமேடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது..
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து கோவில் வளாகத்தில் நடைபெற்ற முகாமை, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி துவக்கி வைத்து பேசினார்..
அப்போது பேசிய அவர்,மதங்களை கடந்து சகோதரத்துவத்தை போற்றும் விதமாக இது போன்ற நிகழ்வுகளில் தாம் அதிகம் கலந்து கொள்வதாக தெரிவித்த அவர்,இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கோவில் அறக்கட்டளையினர் நடத்தி வரும் இந்த முகாம் நாட்டின் பன்முகத்தன்மைக்கு கோவை மாவட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்..
கோவில் வளாகத்தில் நடைபெற்ற முகாமில்,மகளிர் நலன்,கண் பரிசோதனை,குழந்தைகள் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது..
அறக்கட்டளை தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற முகாமில், மதங்களை கடந்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அனைத்து சமுதாய மக்களும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்..
முகாம் துவக்க விழாவில் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,ஏ.அபுதாகீர் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள அய்யாசாமி,சுந்தர்,டாக்டர் நிஷாந்த் ராஜா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்..