தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு கோ பூஜை, திருமுறைகள் பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அபிமுகன் தருமச்சாலையில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 8 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை அதாவது 13 நாட்கள் காவிரி படித்துறையில் புனித நீராடி இறந்த முன்னோர்களுக்குத் தேங்காய், வாழைப்பழம், கருப்பு எள், புஷ்பம், கீரை வகைகள், பச்சரிசி, பழங்கள், காய்கறிகள் ஆகியவை படைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
காலையில் கோ பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து திருமுறைகள் பாராயணம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் தீபாரதனை நடந்தது. பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது