அடிப்படை வசதிகளுக்காக வார்டு கிராமபொதுமக்கள் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிபேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சத்யா ஜோதிராஜ் மற்றும் வெள்ளையாபுரம் கிராம மக்கள் மற்றும் 15வது வார்டு கவுன்சிலர் திருக்கம்மாள் ஆலடி ஈஸ்வரன் மற்றும் சிங்கப்புலியாபட்டி கிராம மக்கள் அனைவரும் அவர்கள் வார்டுக்கு ஒதுக்கப்பட்ட 36 லட்சம் மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பேரூராட்சி நிர்வாகம் மற்ற வார்டு திமுக கவுன்சிலர்களுக்கு ஒதுக்க முயற்சித்து வருவதாக இரு ஊர் பெரியோர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.
இதுதொடர்பாக இன்று காலைபேரூராட்சிக்கு எதிர்புறம் பொதுமக்கள் சேர்ந்து கொண்டு அவர்களுடைய அடிப்படை தேவையான சாலை குடிநீர் மற்றும் மற்ற தேவைகளுக்காக ஒதுக்கப்பட நிதியினை பெற்று தரஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாலை பேரூராட்சி மன்றகூட்டம் நடைபெறஉள்ள நிலையில் இந்தபோராட்டம் நடைபெறுகின்றது துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது