கம்பம் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி
எல்.ஏ
. ஜெகநாத் மிஸ்ரா வழங்கினார் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கம்பம் நகரில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்தார் மாநில பொறுப்பாளர் கூடலூர் செல்வேந்திரன் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம் தனிக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அய்யர்.சுப்பிரமணி. துப்பாக்கி ரகுமத்துல்லா கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாளையம் நந்தகோபால் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக கழக நிர்வாகிகள் ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் விலகி முழு மனதுடன் வெற்றி கழகமான நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் நிறுவனத் தலைவர் மனித நேயம் பண்பாளர் பி.எல்.ஏ. ஜெகநாதன் மிஸ்ரா முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.