கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறப்பு

கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய தகவல் மையத்தைத் திறந்துள்ளது. விரைவில் அதே இடத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படிப்பகத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மையம் கோயம்புத்தூர் ஆர். எஸ். புரத்தில் அமைந்துள்ளது. இது வாரத்தின் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும். மாணவர்கள் இங்கு ஜெஇஇ மற்றும் நீட் போன்ற தேர்வுகளுக்கான ஆலோசனைகளைப் பெறலாம்.

புதிய தகவல் மையத்தின் முழு முகவரி: எண்: 1061, ஏ தியாகராஜா டவர்ஸ், மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர் – 641002.

இந்த புதிய மையம், ஆர்.எஸ். புரம், வடவள்ளி, சாய் பாபா காலனி, கணபதி, ராமநகர், டவுன்ஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி ஆலோசனை மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி குறித்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளின் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வளங்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு ஆலோசனைக்காக நீண்ட தூரம் பயணம் செய்யத் தேவையில்லை.

இந்த தகவல் மையம், சேர்க்கை, நிதி உதவி மற்றும் ஃபிசிக்ஸ்வாலா வகுப்புகளுக்கான பதிவு பற்றிய தகவல்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த இடமாக செயல்படுகிறது. மேலும், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைப் பற்றி நன்கு முடிவெடுக்க உதவும் வகையில் ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளையும் வழங்குகிறது. மாணவர்கள் நேரில் வந்து

ஜெஇஇ மற்றும் நீட் தயாரிப்புக்கான தனிப்பட்ட ஆலோசனையைப் பெறலாம். அத்துடன், படிப்புத் திட்டங்கள், தேர்வு உத்திகள் மற்றும் விரிவான பாட விவரங்கள் குறித்த ஆலோசனைகளையும் பெறலாம்.

பிசிக்ஸ்வாலா கல்வி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அங்கித் குப்தா கூறுகையில், கோயம்புத்தூரில் ஃபிசிக்ஸ்வாலா தகவல் மையம் திறக்கப்பட்டது, அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் கல்வி வழிகாட்டுதலை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. இந்த நடவடிக்கை இத்தகைய தேர்வுகளுக்காக பயணம் செய்ய வேண்டிய தேவையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில், இதே பகுதியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுக்கு தயாராதல் மற்றும் அடிப்படை பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும் வித்யாபீத் மையத்துடன் இந்த தகவல் மையத்தை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஃபிசிக்ஸ்வாலா நிறுவனம் சமீபத்தில் PWNSAT (ஃபிசிக்ஸ்வாலா தேசிய ஸ்காலர்ஷிப் கம் அட்மிஷன் டெஸ்ட்) 2025-இன் நான்காவது பதிப்பை அறிவித்தது. இது ஒரு ஸ்காலர்ஷிப் தேர்வாகும். மாணவர்களின் பொருளாதாரத்தை பொருட்படுத்தாமல், நீட்-யுஜி மற்றும் ஐஐடி-ஜெஇஇ ஆர்வலர்களுக்குக் கல்வி மற்றும் வழிகாட்டுதலை எளிதாக்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. PWNSAT 2025 தேர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் நடத்தப்படும்.

இந்த தேர்வுக்கான பதிவு இலவசம். மேலும், இது வகுப்பு ஐந்து முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள் என இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15, 2025 வரை தேர்வில் கலந்துகொள்ளலாம். ஆஃப்லைன் முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, அக்டோபர் 5 மற்றும் அக்டோபர் 12, 2025 ஆகிய தேதிகளில் அனைத்து ஃபிசிக்ஸ்வாலா வித்யாபீத் மற்றும் பாடசாலை மையங்களிலும் தேர்வு நடத்தப்படும். முடிவுகள் அக்டோபர் 25, 2025 அன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *