கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பிரிவு பகுதியில் த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு வக்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் அபிஷேகம், உச்சிக்கால பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சிவஸ்ரீ ஞானசேகரன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வக்ரகாளியம்மன் கோவிலில் 14 ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவ திருவிழா செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 29ஆவது மகா நவசண்டியாகம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.