ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுல்
தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி நகரில் மத்திய அரசு அறிவித்துள்ள GST வரி குறைப்பு செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவிக்கும் விதமாக பாஜக தேனி மாவட்ட தலைவர் பி ராஜபாண்டி யன் தலைமையில் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் சூரிய நாராயணன் முன்னிலையில் தேனி பெரியகுளம் சாலையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பை வரவேற்று கோஷங்கள் எழுப்பியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.