மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக மதுரை அழகர் கோவில் இராக்காயி அம்மன் கோவிலின் மேற்பகுதி யில் உள்ள வனப் பகுதி யில் வனக்காவலர்கள் பாதுகாப்புடன் 7 கி.மீ. தூரம் மலையேறும் பயிற்சி மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் சேகரிப்பு மற்றும் அகற்றுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளியின் தாளாளர் ஜோதி செந்தில் வேல்முருகன், திட்ட அலுவலர் கோபால கிருஷ்ணன் , ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், வனக் காவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்.