திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்
திருவாரூரில் புதுப்பிக்கப்பட்ட புனித பாத்திமா அன்னை ஆலயத்தினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் திறந்து வைத்தார்.

திருவாரூர் பிடாரி கோவில் தெருவில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஆலய அருள்பொழிவு விழா நடைபெற்றது . வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆலயத்தினை
தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் மற்றும் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி திறந்து வைத்தனர் .தொடர்ந்து முதல் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிகள் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி .கலைவாணன் பங்கேற்ற கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஜெரால்டு மற்றும் திமுக நகர செயலாளர் வாரை .பிரகாஷ் ,திமுக சிறுபான்மை அணி நிர்வாகி ரோலி உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பங்கேற்றனர்.