திருவொற்றியூர் பெரியார் நகரில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அந்த சாலை தனியார் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சாலை போட முடியாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை எம்ஜிஆர் நகர் அருகே பிரதான சாலையில் ஒன்று கூடினர். பின்னர் தங்களுக்கு பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரி மணலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மணலி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்