தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து நடத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் முகம்மது ரஃபி பரிசு வழங்கி கவுரவித்தார்…
மாணவ,மாணவிகளின் கலை மற்றும் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..
கவிதை ,ஓவியம், பேச்சு உள்ளிட்ட திறன்களில் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
இந்நிலையில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்..
இந்நிகழ்ச்சியில்,இயக்குனர் கமலக்கண்ணன் . கவிஞர். கோ. கலியமூர்த்தி . கே. சுப்பிரமணியன். ப. பா. ரமணி. மெள.குணசேகர்.ஆர். புருஷோத்தமன். எஸ். கோட்டியப்பன். மற்றும் அறம். நிர்வாகிகள். ஏ அபுதாகிர் முகமது இஸ்மாயில். ராதாகிருஷ்ணன். அசார் மற்றும்.மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.