தஞ்சாவூர், செப்- 23. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பொன்னாவரை கோகோஸ் திருமண மஹாலில் தென்னை சாகுபடி மாவட்டத் தலைவர். தென்னை விஞ்ஞானி லயன்ஸ் Dr.வா.செ.செல்வம் தலைமையில் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

       இந்தக் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினர் லயன்ஸ் பொறியாளர் சவரிராஜன், லயன்ஸ் முகம்மது ரஃபி, மூத்தகுடிமக்கள் பேரவை தலைவர் பெரும்புலவர் ஆதி.நெடுஞ்செழியன், லயன்ஸ் சிவராஜ், லயன்ஸ் ஆனந்த கிருஷ்ணன், லயன்ஸ் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

   விழா ஏற்பாடுகளை திருவையாறு லயன்ஸ் சங்கம் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள். தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம் பேசும்போது:- தென்னை மரம் பல ஆயிரம், ஆயிரம் வருடங்களுக்கு முன்பு காடுகளில் அதுவாக வளர்ந்த காட்டு மரம்.  இயற்கையின் துணையோடு பல நாடுகளுக்கு நீர் வழியாக மிதந்து கடல் கடந்து சென்று பல நாடுகளின் கடற்கரையோரம் முளைத்து வளர்ந்த மரம். தாவர விதைகளிலே மிகபெரிய விதையும் தென்னை தான். பிற்காலங்களில் மனிதர்களின் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் இந்த தென்னையை பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தென்னைமரம் அவர்கள் வாழ்வியலோடு கலந்த ஒன்றாக மாறியது. தென்னையைத் தவிர அனைத்து மரங்களும் முறிந்தாலோ, வெட்டினாலோ துளிர்த்து கிளைகள் விட்டு வளரும் தென்னை மட்டுமே மனிதனைப் போல் பிறப்பும் இறப்பும் ஒரு முறைதான். தென்னை மரம் முறிந்தால் பட்டுப் போய்விடும் அதன் காரணமாகவே மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணையாக தன்னங்கன்றுகளை, தென்னம்பிள்ளை என்று அழைத்தனர். 

தென்னை வளர்ப்பது என்பது அனைவரும் கூறுவது போல் எல்லா இடங்களிலும் 3 அடி அகலம், 3அடி ஆழம், 3டி நீளம் உள்ள குழியை வெட்டி, ஓரடி மணல் நிரப்பி இரண்டடியில் தென்னையை வளர்ப்பது என்பது அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை. அந்த முறையை விட ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம், ஒரு அடி நீளத்தில் குழியை தோண்டி தென்னை தென்னங்கன்று மட்டை தெரியும் அளவிற்கு மண்ணில் புதைத்தால் போதுமானது. தென்னை மரத்தை பொறுத்தவரை நான்கு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்கள் ஒருமுறை உரம் வைக்க வேண்டும். மண்ணின் வளத்தை பொருத்து பெரிய செலவு செய்ய வேண்டியது இல்லை இழை, தலைகள் மற்றும் காய்கறி கழிவுகளை வீட்டில் ஒரு ஓரத்தில் குழியை தோண்டி அதில் கழிவுகளை சேமித்தாலே சில நாட்களில் அது மக்கிய நல்ல தொழுவலமாக மாறிவிடும். மரத்தின் சில நோய்களுக்கு அல்லது கனிம பற்றாக்குறை இருந்தால் அதற்காக கோகோஸ் உரங்களை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பெல்லாம் 100 அடிக்கு மேல் வளரக்கூடிய பாரம்பரிய மரங்கள் இருந்தது. ஆட்களின் பற்றாக்குறையினால் இப்போதெல்லாம் சிறிய குட்டை ரக மரங்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்துள்ளது என்று பேசினார்.

தென்னை சாகுபடியாளர்களின் சிறந்த கேள்விகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக திருவையாறு லயன் சங்க தலைவர் லயன்ஸ் P.பாபு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *