மின்சார வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்யவும் , மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களை அடையாளம் கண்டு ஊழியர் களுக்கு தினக்கூலி மற்றும் போனஸ் வழங்கிடவும், 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளின் படி,ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்வது , என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மதுரை புறநகர், மாநகர் ஜி.ஜி.சி, கிளைகள் சார்பில் மதுரை புதூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநகர மாவட்டத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மதுரை மாநகர் செயலாளர் அறிவழகன், புறநகர் செயலாளர் திருமுருகன் ஆகியோர் பேசினார்கள். மறியல் போராட்டத்தை வாழ்த்தி சி.ஐ.டி.யு புறநகர் மாவட்ட தலைவர் அரவிந்தன், மின் பொறியாளர் அமைப்பு மாநில துணைத்தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் பேசினர்.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் சுரேஷ்குமார் சிறப்புரை யாற்றினார்.இதில் மின் ஊழியர் புறநகர் கிளையில் இருந்து பிரபுகுமார், தானபாண்டி , நாகநாதன் ஆகியோர் உட்பட மின்வாரிய ஊழியர்கள் 160 பேர் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டனர்.