தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில், வட்ட சட்டப்பணிகள் குழு, வருவாய் துறை,போக்குவரத்து காவல், வட்டார போக்குவரத்து இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன.
தாராபுரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு, வருவாய்துறை, போக்குவரத்து காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து சார்பில் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியினை தாராபுரம் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா வரவேற்புரை நிகழ்த்தி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில், மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பிஷப்தார்ப் கல்லூரி ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தி கோஷங்களுடன் நடந்து சென்றனர்.
இதில் வாகனத்தில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், ஒட்டுநர் பயிற்சி பள்ளியினர், வாகன விற்பனையாளர்கள் தலைக்கவசம் அணிந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல், தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதியதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி, காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி, வட்டாரத்து போக்குவரத்து அலுவலர் பழனியப்பன்,வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சிவக்குமார், அரசு வழக்கறிஞர்கள் மணிவண்ணன், உதயச்சந்திரன் மற்றும் முத்த வழக்கறிஞர்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.