பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு….
முன்னாள் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு……
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ராஜகிரி,பண்டாரவாடை வணிகர் சங்க தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார் ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் அன்பழகன் வரவேற்று பேசினார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தம் , முன்னாள் பள்ளி ஆசிரியர் ஏ.நஜீர் , முன்னாள் மாணவர்கள் ஜெயகிருஷ்ணன்,ஜெயபால்,சத்தியவாணி,மலர்க்கொடி,ஆயிஷா பீவி ,ஹாஜா மைதீன்
மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் 1973-1976 வரை பயின்ற 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் விழா நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர் ஜவகர் அலி தொகுத்து வழங்கினார்.
முடிவில் முன்னாள் மாணவர் சம்பத் நன்றி கூறினார்.