பண்ருட்டி வட்ட பொது நல அமைப்பின் சார்பில் தென் மண்டல ஐஜி இடம் பெருந்திறல் முறையீடு செய்யப் போவதாக அறிவிப்பு..

பண்ருட்டி பட்ட பொது நல அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்.
இன்று நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  1. பண்ருட்டி நகரப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தை அணுகி முறையிட்டாலும், அதற்கான தீர்வை ஏற்படுத்தாமல் காலதாமதம் செய்து வருவதால், இப்பிரச்சனையை நீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
  2. பண்ருட்டி, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, புதுப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை எதிர்மனுதாரர்களிடம் பெறும் நிலையில், இரு தரப்பையும் நேர்மையாக விசாரிக்காமல், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மேலும், பல பகுதிகளில் போதைப்பொருட்கள் அதிகமாக பரவி வருவதையும் கட்டுப்படுத்தாத காவல்துறையையும் கூட்டம் கண்டித்தது.
    இதனைத் தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி தென் மண்டல ஐ.ஜி. அவர்களை பெரும் திரளுடன் நேரில் சந்தித்து, பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
  3. பண்ருட்டி வட்டப் பகுதியில் உள்ள இந்து அறநிலையத் துறை சார்பிலான சில கோயில்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக முறையிட்டபோதும், அதற்கான தீர்வை ஏற்படுத்தாமல் காலதாமதம் செய்யும் இந்து அறநிலைத் துறையை கூட்டம் கண்டித்தது. இதற்கான தீர்வை பெற நீதிமன்றத்தை நாடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மேற்கண்ட மூன்று தீர்மானங்களையும் உறுதியுடன் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு தலைவர்: சேகர் ஆலோசகர்கள்: வேலுமணி, அர்ஜுனன், முத்து
தலைவர்: தெய்வீக தாஸ் செயலாளர்: சேக் நூர்தீன் துணைத் தலைவர்: பஞ்சாட்சரம்
நிர்வாகிகள்: ராஜா பாபு, முத்து, தேவநாதன், சதீஷ்குமார், சிலம்பரசன்

இத்தகைய பிரச்சனைகள் இந்த அளவுக்கு வலுத்து நிற்க காரணம் பண்ருட்டி காவல்துறை மற்றும் பண்ருட்டி நகராட்சி தான் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *