இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு விழா
திருவாரூர் விஜயபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ‘ நம்ம ஊரு நம்ம பள்ளி,திட்டத்தின் கீழ் பள்ளியில் அங்கன்வாடி மையம் மாதிரி அங்கன்வாடி மையமாக மேம்படுத்தி புதிய கற்றல் மையம் தொடங்கப்பட்டது,
விழாவினை நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மையத்தினை திறந்து வைத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், கற்றல் திறன் என்பது சூழலிலும் இருக்கிறது”, என்பதை சுட்டிக்காட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் மாவட்ட திட்ட அலுவலர் (அனைவருக்கும் கல்வி) சுரேஷ், வட்டார கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், சியாமளா, மழலையர் கல்வியிலும் தமிழ்நாடு அரசு சாதனை படைத்த வருகிறது, என விளக்க உரையாற்றினார்’ இனிது அறக்கட்டளை’ சார்பில் நிறுவனர் ஆதி, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கினார். நகர மன்ற உறுப்பினர் அன்வர், பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார் நிறைவில் குழந்தைகள் நல மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகந்தி நன்றி கூறினார்.