இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் 50 நபர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழக அரசு சார்பில் 2025 -ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள்
நடைபெற்றன.
இதில் கல்லூரி, பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில் இருந்து 18 ஆயிரம் பேர்
கலந்து கொண்டனர். இதில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கமுதி அருகே பேரையூர் பகுதியில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், பூப்பந்து மற்றும் பல போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.3000 வழங்கப்பட்டது. நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேர் வெற்றி பெற்று ரூ.1,50,000 பரிசு தொகையை தட்டிச் சென்றனர். மாணவர்களை கௌரவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மற்றும் மாவட்ட எஸ்பி சந்தீஸ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினர்.
மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி தலைவர் அகமதுயாசின் மற்றும் கல்லூரி முதல்வர் ராமர், உதவி பேராசிரியர் தர்ம முனீஸ்வரன் ஆகியோர் பாராட்டினர். இவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க
உள்ளனர்.