போடிநாயக்கனூர் நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா
நகர் மன்ற தலைவர் மரக்கன்றுகளை நட்டார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு புதன்கிழமை நகராட்சி பழைய குப்பை கிடங்கு நகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் இடத்தில் ஒரு பகுதி இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினமான இன்று பசுமையை போற்றும் விதமாக 100 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மர கன்றுகளை நட்டு வைத்து விழாவை துவக்கி வைத்தார்.
இது குறித்து நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் கூறும் போது இந்த வளாகத்தில் இன்று 100 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது மேலும் இந்த இடத்தில் 100 மரக்கன்றுகள் நடுவதற்கு இடங்கள் சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் மரக்கன்றுகள் நடுவது மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து ஒரு பிள்ளையைப் போல் வளர பராமரிக்கப்படும்.ஒரு வீட்டில் குழந்தையை வளர்ப்பது போல் மரங்களையும் வளர்ப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முழு முயற்சி எடுத்து பராமரிக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன் முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவர் எம் சங்கர் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் திருப்பதி சபீர். உள்பட நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்