திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் ராஜா, அன்புராஜ், உடற்கல்வி இயக்குனர் ராம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர், நிகழ்ச்சியில் குடவாசல் அரசு மருத்துவமனை ஆற்றுனர் கவிமாறன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்து எய்ட்ஸ், டிபி போன்ற நோய் தொற்று எவ்வாறு உருவாகிறது,
நாம் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும், நம்மை சுற்றி உள்ள மக்களை அவர்களின் அறியாமையை பள்ளி மாணவனாக எப்படி அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் மற்றும் மாணவர்கள் தன் சுத்தம் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் எவ்வாறு எதிர்கொள்வது, நம்மை நாமே பாதுகாத்து கொள்வது என்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இளம் பருவத்தில் உடல் ரீதியான மாற்றம் அதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதையும் விவரமாக மாணவர்களிடையே விவாதிக்கப்பட்டது.