போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் என்ற நிகழ்ச்சி போடி சுப்புராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி பொறுப்பு நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக சுப்புராஜ் நகர் பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் சாக்கடை தூர்வாரதல் குப்பைகளை அகற்றுதல் போன்ற தூய்மை பணிகள் செய்யப்பட்டன.
மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்கப்பட்டு உடனுக்குடன் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் திருப்பதி சபீர் உள்பட நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.