திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி செவ்வாய்க்கிழமை கொழ அலங்காரம், மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார், இரவு 7மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
முதல் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் மாடகுடி ச.செங்குட்டுவன் உடையார், வலங்கைமான் கோகுல் மெடிக்கல் சி.பாலாஜி, கிருஷ்ணா பேட்டரி தி.வீரமணி உடையார் & பிரதர்ஸ், அம்மன் மெடிக்கல் தில்லையம்பூர் ஜெ.மணிகண்டன் உடையார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இரண்டாம் நாள் 24- ந்தேதி புதன்கிழமை மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ காமாட்சி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் மண்டகப்படி உபயதாரர்கள் கல்விக்குடி ஆ.தியாகராஜன் உடையார்,வளையமாபுரம் எஸ்.முருகானந்தம், விருப்பாச்சிபுரம் தெய்வத்திரு கோ.தமிழ்ச்செல்வன் உடையார், மாடகுடி காந்திமதி ராமநாதன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.