செங்குன்றம் செய்தியாளர்
வடசென்னை பகுதிகளான மாதவரம் ,மணலி ,சாத்தாங்காடு ,கொடுங்கையூர், ஆர் கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரிகளில் இருந்து டீசலை திருடி அதனை அதிக லாபத்திற்கு விற்பனை செய்யும் தண்டையார்பேட்டை , பரமேஸ்வரன் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரை மாதவரம் பால் பண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறைக்கு அனுப்பிய போலீசார் மேலும்,
அவர் கொடுத்த தகவலின் பேரில் , அவரது கூட்டாளியான மணி என்பவரை கொடுங்கையூரில் வைத்து ஆர்கே நகர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது,
இதுபோல் டேங்கர் லாரிகளில் இருந்து ஆயிலை திருடிவிற்கும் கும்பலில் சிவா ,மகி உள்ளிட்ட பலர் அம்பத்தூர் ,கள்ளிகுப்பம் மற்றும் சென்னையில் பல இடங்களில் , பழைய பொருட்களை வாங்கி விற்கும் காயலான் போல கடைகளை அமைத்து , ஐ.ஓ.சி நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படும் டீசல் பெட்ரோல், ஆயில் மற்றும் எண்ணெய் பொருட்களை ஏற்றி வரும் லாரியின் ஓட்டுநரை மிரட்டி அவர்களுக்கு சொற்பமாக பணம் கொடுத்து டீசல் ஆயிலை திருடி அதனை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக தெரியவந்தது.
மேலும், இதுபோல் தொழில் செய்து வரும் இரண்டு கோஷ்டிக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கம். தொழில் போட்டியில் ஒருவருக்கொருவர் இந்த வியாபாரத்தை தான் மட்டும் தான் செய்ய வேண்டும் என இறுமாப்புடன் இருந்து வருவதால் இவர்களுக்குள் மோதல் வருவதற்கு முன்பாக போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு கைது கைது நடவடிக்கை மேற்கொண்டு மேலும் வேறு ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.