இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சுவக்ஷதா ஹை சேவா ( தூய்மை இயக்கம்) இந்த பிரச்சாரத்தின் பேரில் வாலாஜாபாத் அடுத்த தேவரியம் பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி தலைமை வகித்து பனை விதைகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றம் தலைவர் அஜய் குமார் முன்னோடி வங்கி மேலாளர் திலீப் வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கீதா ராணி மற்றும் இந்தியன் வங்கியின் வணிக தொடர்பாளர்கள், சுய உதவிக் குழுக்கள் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டனர்