இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்
பணித்திட்டம் சார்பில் 7 -நாள் சிறப்பு முகாமில் முதல்நாள் மு.தூரி கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்தான வேலு தலைமையிலும், என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன், பள்ளி கல்விக்குழு தலைவி வடிவுக்கரசி , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து ஆகியோர்முன்னிலையில் நடைபெற்றது
அனைவரையும் திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார். இம்முகாம் துவக்க
விழாவில் முதுகுளத்தூர் காவல் சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் கலந்தகொண்டு உரையாற்றி மரக்கன்றுகளை நடவு செய்தார்.
பேரூராட்சி செயல்அலுவலரும் கலந்து கொண்டார் இறுதியில் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்சியில் உடற்கல்வி ஆசிரியர் பழனிவேல், மணிகண்டன், சங்கர் மற்றும் என்.எஸ்.எஸ்.தன்னார்வலர் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.