தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420
தாராபுரம், நகராட்சி அளவிலான குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்த குழு கூட்டம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தார். இதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு குழு மூலமாக எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையர் முஸ்தபா, திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சமூகப் பணியாளர் தினேஷ்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர்கள் சாந்தி இளங்கோ, ஷீலாதேவி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெயராஜ், மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், என்.சி.பி.நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், பெண் உதவி நிலைக் காவலர்கள் கற்பகம், நம்பிக்கை மரியாள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.