தஞ்சாவூர் மாவட்டம் லயன்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம்3242F,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய பார்வைக்கு முதலிடம் கருத்தரங்கு அரவிந்த் கண் மருத்துவமனையின் நான்காவது தளத்தில் நடைபெற்றது .
கருத்தரங்கை மாவட்ட ஆளுநர் லயன் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.மாவட்டத் தலைவர் பார்வைக்கு முதலிடம் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.கார்த்திக் சீனிவாசன், மூத்த மருத்துவ அதிகாரி மீனாட்சி சுந்தரம்,. கண் வங்கி மேலாளர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.தொடர்ந்து மாவட்ட வழிகாட்டி முகமது ரஃபி பாராட்டப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர்டாக்டர் டி. ஸ்டாலின் வாழ்த்துரை ஆற்றினார்.
தலைமை மருத்துவர் டாக்டர் திவ்யா கூறுகையில் குழந்தைகள், நடுத்தர வயதுடையோர், முதியோர் சந்திக்கும் கண் பிரச்னைகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கினர். கருத்தரங்கில் .ரத்னகுமார், மற்றும் அனைத்து லயன் சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.