திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாள் 25- ந்தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ தான்ய லெட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மூன்றாம் நாள் மண்டகப்படி உபயதாரர் தொழவூர் தெய்வத்திரு கணேச உடையார் குமாரர்கள் வலங்கைமான் கும்பகோணம் ரோடு க.செல்வம் உடையார் & சகோதரர்கள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். நான்காம் நாள் 26- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சி அளித்தார், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு நடைபெற்றது, இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நான்காம் நாள் மண்டகப்படி உபயதாரர் செண்பகக்கொல்லை ஆர்.பரமசிவ உடையார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நவராத்திரி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்/ தக்கார் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.