தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய ரேஷன் கட்ட பூமி பூஜையை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன கோடி நகராட்சி பகுதி வ உ சி நகரில் ஒரே இடத்தில் மூன்று ரேஷன் கடைகள் உள்ளன
இந்த கடைகளில் ஒரு கடைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன இதனால் இந்த கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இதனால் இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாகவும் இந்தப் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பியிடம் கோரிக்கை வைத்தனர் இதனை பரீவுடன் பரிசீலித்த தேனி எம்பி தனது பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 12 லட்சம் ஒதுக்கீடு செய்தார் இதன் அடிப்படையில் போடி திருமாலபுரம் 19 ஆவது வார்டு காளியம்மன் கோவில் சாலையில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி வழிகாட்டுதலின்படி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி திமுக நகர செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் ஆகியோர் முன்னிலை பூமி பூஜை செய்யப்பட்டு ரேஷன் கடை கட்டும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற கவுன்சிலர் வெங்கடேஷ் குமார் மற்றும் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது இந்த ரேஷன் கடை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பொழுது நகர பகுதிகளான ஒழுகால் பாதை வ உ சி நகர் சுதேசி நகர் சாலை காளியம்மன் கோவில் சாலை உள்ளிட்ட பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்றும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் பரிசீலனை செய்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நிதி ஒதுக்கீடு செய்து ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்த தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்களுக்கு எங்கள் பகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.