மதுரையில் நமது மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் துவக்க விழா மதுரையில் நமது மக்கள் முன்னேற்றக் கழக விழா கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது இந்த சிறப்பான நிகழ்ச்சிகள் கொங்கு நாடு கட்சித் தலைவர் கவியரசு உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று விழா சிறக்க வாழ்த்துரை வழங்கினார்கள் இந்த துவக்க விழாவில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பேசும்போது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த மதுரையில் மாநாடுகள் நடத்தி தமிழகத்தை ஆளும் அளவுக்கு பிரசித்தி பெற்ற மாநகரான மதுரையில் தான் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிப்புச் செம்மல் கேப்டன் விஜயகாந்த் ஆகியோர் கட்சி தொடங்கினர்.
இப்படிப்பட்ட பெயர் பெற்ற மண்ணில் நாங்கள் எங்கள் கட்சியின் பெயரை மதுரை மண்ணில் தான் அறிவித்தோம் இதேபோல் இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையில் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது எங்கள் கட்சியின் கொள்கை தலைவராக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை நெஞ்சில் சுமந்து அரசியல் பணிகளை துவங்கி இந்த நாட்டில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க பாடுபடுவது எங்களின் நோக்கமாகும் திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் கட்சிகளிடனோ அல்லது தனித்து களம் காண்பது பற்றியோ இன்னும் முடிவெடுக்கவில்லை. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது
மது ஒழிப்பு என்பது எங்கள் கட்சியின் பிரதான கொள்கை தமிழக கேரள எல்லையில் உள்ள கற்புக்கரசி கண்ணகி கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வலியுறுத்தி அவர் பிறந்த ஊரான பூம்புகாரில் இருந்து தேனி மாவட்டம் குமுளி எல்லை வரை 470 கிலோமீட்டர் பயணித்து கால் சிலம்பு ஏந்தியவாறு வருகிற டிசம்பர் மாதம் கண்ணகி நீதி யாத்திரை நடத்த உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார் இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கார்வேன் பஸ் உள்ளிட்ட நூற்று கணக்கான வாகனங்களில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் குவிந்து மதுரை மாநகரமே குலுங்க செய்து சிறப்பித்தனர்