கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நேரில் ஆறுதல் கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் அப்பாவி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
இதனை தொடர்ந்து வெள்ள கோவில் அரவக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூடல் செல்வேந்திரன் சங்கரலிங்கம் மாநில இளைஞரணி பொறுப்பாளர்கள் எம் எஸ் மணி சுறா திருச்சி பொறுப்பாளர்கள் டைமன் ராஜா சிவா தலைமை நிலைய செயலாளர் ரகுபதி மாநில சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் அபுதாகீர் கம்பம் நகர பொறுப்பாளர்கள் ஐயர் சுப்பிரமணி உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்