நாடார் மஹாஜன சங்கத்தை தோற்றுவித்த பொறையார் டி. ரத்தினசாமி நாடார் 160 பிறந்தநாள் விழா தஞ்சை வினோத் மஹாலில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குருசாமிபாளையம் துவக்கி வைத்தார்.நாடார் மகளிர் மன்றத்தினர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.சோழமண்டல நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் தலைவர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாடார் மஹாஜன சங்கம் தலைவர் குருசாமி வெள்ளையன் தலைமை தாங்கினார்.தஞ்சாவூர் நாடார்கள் உறவின்முறை சங்கம்,ராமமூர்த்தி நாடார் முன்னிலை வகித்தார்.
நாடார் மஹாஜன சங்கம்,பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்..
தொடர்ந்து மண்டல செயலாளர் இன்ப கிருபாகரன்,மாவட்ட செயலாளர்கள் கருணாநிதி, முருகன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.மேலும் சமுதாயப் பணயில் சிறந்து பங்களிக்கும் உறவின் முறைகளுக்கு பொறையார் த.இரத்தினசாமி நாடார் விருது வழங்கி .கௌரவிக்கப்பட்டது.சமுதாய பொறுப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.இதில் ஏராளமான நாடார் சமுதாய மக்கள் பங்கேற்றனர்.